வணிகம்
செரண்டிப் கோதுமை மா ஆலை டுபாயில் நடைபெறும் புகழ்பெற்ற Gulfood 2025 கண்காட்சி நிகழ்வில் மீண்டும் இணைந்தது

Feb 27, 2025 - 12:23 PM -

0

செரண்டிப் கோதுமை மா ஆலை டுபாயில் நடைபெறும் புகழ்பெற்ற Gulfood 2025 கண்காட்சி நிகழ்வில் மீண்டும் இணைந்தது

இலங்கையின் முன்னணி கோதுமை மா தயாரிப்பாளரான செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம், உணவு மற்றும் விருந்தோம்பலைக் காட்சிப்படுத்தும் நோக்கில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் உலகின் மிகப்பெரிய கண்காட்சி நிகழ்வான டுபாயில் நடைபெற்ற புகழ்பெற்ற Gulfood 2025 கண்காட்சி நிகழ்வில் தமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுடன் பங்கேற்றது. 30வது வருடமாக நடைபெற்ற இவ்வருடத்திற்கான கண்காட்சியில் முக்கிய வாடிக்கையாளர்களுடன் இணைந்து செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு பங்கெடுத்திருந்தது. சமையல் துறையிலான கண்டுபிடிப்புக்களைக் காட்சிப்படுத்தி, தொழில்துறையில் பெறுமதியான தொடர்புகளை உருவாக்குவதற்கான மூலோபாயம் மிக்க தளமாக இந்தக் கண்காட்சி அமைந்தது. 

டுபாய் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள தாய் நிறுவனமான Al Ghurair நிறுவனத்துடன் கொண்டிருக்கு நிறுவனத்தின் மூலோபாய உறவுகளின் ஊடாக இந்தப் பங்கேற்பு மேம்படுத்தப்பட்டது. இதன் மூலம் கண்காட்சியின் வழமையான பங்காளர் என்ற ரீதியில் வளைகுடாப் பிராந்தியத்தின் உணவு மற்றும் பானத் துறையில் வலுவான பிரசன்னம் உறுதிப்படுத்தப்படுகின்றது. கண்காட்சிக்கு வருகை தந்த விருந்தினர்களை செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தினர் தாய் நிறுவனமான Al Ghurair இன் கூடத்திற்கு வழிநடத்தியிருந்தனர். அங்கு அவர்களுக்கு விசேட அம்சங்களைப் பார்வையிட முடிந்தது. 

இந்த விஜயத்தின் ஓர் அங்கமாக செரண்டிப் கோதுமை மா ஆலை வாடிக்கையாளர்கள், மேம்படுத்தப்பட்ட கோதுமை மா ஆலை, சோயாபீன்ஸ் பதப்படுத்தும் ஆலை, ஓட்ஸ் தயாரிப்பு ஆலை, தீவன ஆலை மற்றும் பஸ்டா தயாரிப்பு ஆலை உள்ளிட்ட ஜெபெல் அலியில் அமைந்துள்ள Al Ghurair நிறுவனத்தின் அதிநவீன உற்பத்தித் தொழிற்சாலைக்கு சுற்றுப் பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சுற்றுப்பயணம் உலகத்தரம் வாய்ந்த சுகாதாரத் தரங்களைப் பராமரிப்பதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை நிரூபித்ததுடன், ஜெபெல் அலி துறைமுகத்தில் உள்ள அவர்களின் களஞ்சியங்களையும் பார்வையிடுவதற்கான வாய்ப்பை வழங்கியது. இந்த விரிவான சுற்றுப் பயணத்தின் மூலம் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு தாய் நிறுவனத்தின் செயற்பாடுகளின் பிரம்மாண்டம் மற்றும் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் போன்றவற்றை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. கண்காட்சியிலிருந்து தொழிற்சாலைக்கான சுற்றுப் பயணம் வரையிலான பயணத்தின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு செரண்டிப் கோதுமை ஆலை தயாரிப்புக்களின் பெறுமதிச் சங்கிலி பற்றி அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. 

‘தேசத்தை போஷணையூட்டல்’ என்ற நிறுவனத்தின் நோக்கத்திற்கு உண்மையாக இருக்கும் வகையில் உணவுத் தயாரிப்புத் தொழில்நுட்பத்தில் அண்மைய மேம்பாடுகள், வளர்ந்துவரும் நிலைப்புத் தன்மை மற்றும் சர்வதேச உணவுத் துறையில் காணப்படும் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் இந்த உலகளாவிய தளத்தை சரியாகப் பயன்படுத்துகின்றது. 

பிரதான வாடிக்கையாளர்களுக்கு நுண்ணறிவான விடயங்களை அறிந்து கொள்வதற்கும், Gulfood 2025 கண்காட்சி ஊடாக உலகளாவிய தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பை வழங்குவது என்ற பாரம்பரியத்தை நிறுவனம் தொடர்ந்து வருவதுடன், பங்குதாரர்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஆதரிப்பதிலும் தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்துகின்றது. 

பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெற்ற 30வது கண்காட்சியான Gulfood 2025 கண்காட்சி உணவு மற்றும் விருந்தோம்பலுக்கான உலகின் மிகப்பெரிய கண்காட்சியாகவும், வணிகங்களுக்கு இடையிலான சிறந்ததொரு தளமாகவும் தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வானது 129ற்கும் அதிகமான நாடுகளில் உள்ள விநியோகஸ்தர்கள், கொள்வனவாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்ததுடன், உணவு மற்றும் குடிபானத் துறையில் புதுமைகளை ஏற்படுத்துவதற்கு புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வருடக் கண்காட்சியில் பல நாடுகளிலிருந்து 5,500 காட்சிக் கூடங்களை உள்ளடக்கியிருந்தது. காட்சிக் கூடங்களை வைத்திருந்தவர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கியிருப்பதுடன், தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பையும் இந்தக் கண்காட்சி உருவாக்கிக் கொடுத்திருந்தது. தெளிவுபடுத்தல் அமர்வுகள், புத்தாக்க விருதுகள், சிறந்த உணவுத் தயாரிப்பு நிபுணர்களால் முன்னெடுக்கப்பட்ட உணவுத் தயாரிப்புப் பற்றிய விளக்கங்கள், வழிப்படுத்தப்பட்ட சுற்றுப் பயணங்கள், YouthX ஊடான இளம் துறைசார் நிபுணர்களுக்கான தளம் மற்றும் Gulfood என்ற தலைப்பிலான ஒன்றுகூடல் போன்றவற்றையும் இந்த நிகழ்வு உள்ளடக்கியிருந்தது. போட்டி நிறைந்த உணவு மற்றும் குடிபான சந்தையில் உள்ளவர்களின் நிலைப்புத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது.

Comments
0

MOST READ
01
02
03
04
05