Feb 27, 2025 - 03:16 PM -
0
கொமர்ஷல் வங்கியானது இலங்கையில் மேம்பட்ட நீர் சிகிச்சை மற்றும் மீட்புப் பிரிவை மேம்படுத்தும் முயற்சிக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் வங்கியானது விளையாட்டு மருத்துவத்தை மேம்படுத்தும் அதேவேளை மற்றும் சில தொற்றல்லாத நோய்களால் பாதிக்கப்படும் (NCDs) நோயாளிகளின் மறுவாழ்வு மற்றும் முகாமைத்துவத்திற்கான வசதிகளை வழங்குகிறது.
இதற்கிணங்க கொமர்ஷல் வங்கியானது அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ நிலையத்திற்கு (CSEM) குளிர்நீர் தொட்டி (Ice bath chiller tub) ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது. குளிர் நீர் குளியல் என்பது ஒரு மேம்பட்ட மீட்பு முறையாகும், இது தசை மீட்புக்கு உதவுவதுடன் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் நீண்ட கால காயங்களைத் குணப்படுத்துகின்றது. கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு சனத் மனதுங்க மற்றும் பிரதம நிதி அதிகாரி திரு நந்திக புத்திபால ஆகியோர் வங்கி மற்றும் அதன் சமூகப் பொறுப்பு நிதியத்தின் சார்பில் இந்த உபகரணங்களை நன்கொடையாக வழங்கினர்.
CSEM இன் கூற்றுப்படி, இலங்கை விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து தமது திறமைகளை வெளிப்படுத்தி வருவதால் அவர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், காயங்களைத் தடுக்கவும், விரைவாக குணமடையவும் சிறப்பு மருத்துவ உதவியின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விளையாட்டு மருத்துவத்தின் வல்லுநர்கள், அபாயங்களைக் குறைக்கும் அதே வேளையில் விளையாட்டு வீரர்கள் தங்கள் முழுத் திறனையும் அடைவதை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. அத்துடன் இலங்கையின் முதலாவது 100மூ கார்பன் நடுநிலை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier I வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது.வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக CBC ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது. வங்கியானது அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.

