Feb 27, 2025 - 07:55 PM -
0
நாட்டின் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.
அதற்கமைய, ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.