செய்திகள்
எரிந்த வீடுகளுக்கு இழப்பீடு - மற்றுமொரு பட்டியல் வெளியீடு

Feb 27, 2025 - 09:50 PM -

0

எரிந்த வீடுகளுக்கு இழப்பீடு - மற்றுமொரு பட்டியல் வெளியீடு

2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கத்திடமிருந்து இழப்பீடு பெற்றவர்களின் மற்றொரு பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (27) பாராளுமன்றத்தில் வெளியிட்டார். 

அதன்படி, ஞானக்கா என்றழைக்கப்பட்டும் டபிள்யூ.எம்.ஞானவதி என்ற பெண்ணுக்கு 2.8 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், கெஸ்பேவ நகரசபை தலைவர் லக்ஷ்மன் பெரேராவுக்கு 696 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தலைவர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் போன்றோருக்கு 1,125 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

அப்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட தொகை 1,221 மில்லியன் ரூபா. 

இதற்கிடையில், இந்த உரையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பணியாற்றிய காலகட்டத்தில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அரசாங்க நிதியில் செலவு செய்யப்பட்ட விதம் குறித்தும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வௌியிட்டார். 

2016 ஆம் ஆண்டு முதல் 14 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு 662.34 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

மேலும், ஈஸ்டர் தின தாக்குதல் விசாரணை அறிக்கைக்காக 1,063 மில்லியன் ரூபாவும், ஊழல் தடுப்பு அலுவலகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய 3.5 மில்லியன் ரூபாவும், 2015 முதல் 2019 வரை அரசியல் பழிவாங்கும் அறிக்கைகளுக்காக 8.42 பில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். 

அதன்படி, 14 ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்காக மொத்தம் 5,301 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

இருப்பினும், போராட்டக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2022 இல் நிறுவப்பட்ட 13ஆவது ஆணைக்குழு மட்டுமே வேகமாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05