விளையாட்டு
டெல்லி அணியின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் நியமனம்

Feb 27, 2025 - 11:05 PM -

0

டெல்லி அணியின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் நியமனம்

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி ஆரம்பமாகிறது. 10 அணிகள் மோதும் இந்த தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. 

இந்நிலையில் டெல்லி அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05