Header Logo

சினிமா
பிரபல நடிகர் கைது

Feb 28, 2025 - 06:38 AM -

0

பிரபல நடிகர் கைது

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் போசனி கிருஷ்ண முரளி. அவரை ஆந்திர பொலிஸார் திடீரென நேற்று கைது செய்தனர். 

அரசியலில் ஈடுபட்டிருந்த போசனி, கடந்த ஆட்சியின்போது பவன் கல்யாண் பற்றி பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியுள்ளார். 

பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் அவர் விமர்சனம் செய்தார். ஆட்சி மாறிய பின்பும் இதுவரையில் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. 

இந்நிலையில் ஐதராபாத், கச்சிபவுலியில் உள்ள போசனி வீட்டிற்கு நேற்று சென்ற அனந்த்பூர் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். 

அதன்பின் அவருக்கு மருத்துவ பரிசோதனைகளைச் செய்துள்ளனர். தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக போசனி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரை கைது செய்தது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரை கைது செய்துள்ளதாக போசனி மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

title