Feb 28, 2025 - 10:34 AM -
0
புல்மோட்டை விசேட அதிரடிப் படையினர் குழு நேற்று (27) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போது ஒரு T56 துப்பாக்கியின் மெகசின் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகளையும் மீட்டுள்ளனர்.
வெலிஓயா பொலிஸ் பிரிவின் கிரிப்பன்வெவ பகுதியில் குறித்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக வெலிஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.