Feb 28, 2025 - 01:34 PM -
0
நாடு முழுவதும் கல்விக்கூடங்களை நிறுவ, தனியார் K-12 கல்வியில் உலகளாவிய முன்னணி நிறுவனமான GEMS கல்வி நிறுவனத்துடன் அதானி அறக்கட்டளை இணைந்து பணியாற்றவுள்ளது. அதானி குடும்பத்திடமிருந்து INR 2,000 கோடி ஆரம்ப நன்கொடையுடன், உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் கற்றல் உட்கட்டமைப்பை சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும் நியாய விலையில் வழங்குவதற்கு இந்தக் கூட்டாண்மை முன்னுரிமை அளிக்கும். இந்த அறக்கட்டளை இந்தியாவின் மிகப்பெரிய உட்கட்டமைப்பு நிறுவனமான அதானி குழுமத்தின் சமூகப் பொறுப்புப் பிரிவாகும்.
தலைவர் கௌதம் அதானியின் சமூகத் தத்துவமான सेवा साधना है, सेवा प्रार्थना है और सेवा ही परमात्मा है,இற்கு இணங்க இந்தக் கூட்டாண்மை, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டின் ஆதரவுடன் கற்பித்தல் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் எழுச்சிக்கு வழிவகுக்கும்.
முதல் ‘Adani GEMS School of Excellence’ 2025-26 கல்வியாண்டில் லக்னோவில் அமையப் பெறும் . அடுத்த மூன்று ஆண்டுகளில், K-12 பிரிவில் குறைந்தது இதுபோன்ற 20 பாடசாலைகள் இந்தியாவின் முதன்மை பெருநகரங்கள் முழுவதும் தொடங்கப்படுவதுடன் அதைத் தொடர்ந்து, இரண்டாம் நிலை முதல் நான்காம் நிலை நகரங்களிலும் தொடங்கப்படும். இந்தப் பாடசாலைகளில், CBSE பாடத்திட்டத்தில் 30% இடங்கள் வசதி குறைந்த மற்றும் தகுதியுள்ள மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். அதானி குழுமத்தின் அகில இந்திய இருப்பு,பரந்த உட்கட்டமைப்பு திறன்கள் மற்றும் GEMSஇன் கல்வி நிபுணத்துவத்தை பயன்படுத்தி, இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு தரமான கல்விக்கான நியாய மற்றும் நிலையான மாதிரியை உருவாக்க இந்தக் கூட்டாண்மை திட்டமிட்டுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த கல்வியை நியாய விலையிலும் பரவலாக அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது என்று அதானி குழுமத்தின் தலைவர் திரு. கௌதம் அதானி கூறினார். GEMS கல்வி நிறுவனத்துடனான எங்கள் கூட்டாண்மை மூலம் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான டிஜிட்டல் கற்றலை ஏற்றுக்கொள்வதன் மூலம் மாற்றத்தை உருவாக்கும் அடுத்த தலைமுறையினரை இந்தியாவில் சமூக பொறுப்புள்ள தலைவர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். என்றார்.
சமூகப் பொருளாதாரப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், கற்பவர் யாவருக்கும் தரமான கல்வியை அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்கள் தொலைநோக்குப் பார்வையாக எப்போதும் இருந்து வருகிறது. என்று GEMS கல்வி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சன்னி வர்க்கி கூறினார். அதானி அறக்கட்டளையுடனான கூட்டாண்மை, எங்கள் அணுகலையும் தாக்கத்தையும் விரிவுபடுத்தவும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கற்பவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எங்கள் உலகளாவிய கல்வி நிபுணத்துவத்தை கொண்டு செல்லவும் எங்களை வலுப்படுத்தும். என்றார்.
ஒரு தேசத்தை மாற்றுவதற்கு அதன் இளைஞர்களைக் கட்டியெழுப்புவதில் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் தேவை என்று இந்த ஒத்துழைப்பு நம்புகிறது. இந்த முயற்சி மிகவும் திறமையான மற்றும் மதிப்பு அடிப்படையிலான திறமைக் குழுவை உருவாக்கும் நோக்கத்தை அடைய உதவும். அதானி- GEMS பாடசாலைகள், இந்தியாவின் சிறந்த படிப்பு வாரியங்களுடன் இணைந்த உலகளாவிய பாடத்திட்டத்தால் பயனடையும். அதானி அறக்கட்டளை தொடர்பாக 1996 முதல், அதானி குழுமத்தின் சமூக நலன் மற்றும் மேம்பாட்டுப் பிரிவான அதானி அறக்கட்டளை, இந்தியா முழுவதும் நிலையான விளைவுகளுக்காக மூலோபாய சமூக முதலீடுகளைச் செய்வதில் ஆர்வத்துடனும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடனும் இருந்து வருகிறது.
இது கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, நிலையான வாழ்வாதாரம், காலநிலை நடவடிக்கை மற்றும் சமூக மேம்பாடு ஆகிய முக்கிய துறைகளில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வளப்படுத்துகிறது. அறக்கட்டளையின் உத்திகள் தேசிய முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதானி அறக்கட்டளை தற்போது 19 மாநிலங்களில் 6,769 கிராமங்களில் செயற்படுவதுடன் 9.1 மில்லியன் மக்களின் வாழ்க்கையில் நன்மையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
GEMS கல்வி நிறுவனம் தொடர்பாக
60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட GEMS கல்வி நிறுவனம், தனியார் K-12 கல்வியில் நம்பகமான உலகளாவிய தலைவராக வளர்ந்துள்ளது. இது மாணவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் கல்விச் சிறப்பிற்கான அர்ப்பணிப்புக்காக பெயர் பெற்றது. தரமான கல்வியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கத்துடன், GEMS கல்வி நிறுவனம், மாணவர்களை வாழ்நாள் முழுவதும் கற்பவர்களாகவும், விமர்சன சிந்தனையாளர்களாகவும், உலகளாவிய குடிமக்களாகவும் மாற்ற உதவுகிறது. எட்டு நாடுகளில் உள்ள K-12 தனியார் பாடசாலைகளின் வலையமைப்பைக் கொண்டு, GEMS கல்வி நிறுவனம் 176 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,70,000+ மாணவர்களுக்கு உயர்தரத்திலான முழுமையான கல்வியை வழங்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், அமெரிக்காவில் உள்ள எட்டு Ivy லீக் பல்கலைக்கழகங்கள் உட்பட, 53 நாடுகளில் 1050இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் GEMS மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

