Feb 28, 2025 - 04:24 PM -
0
நாட்டின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் பெண்களின் சேவை காலத்தை நீட்டிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர இன்று (28) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
அங்கு கருத்து தெரிவிக்கும் போது, அவர் கூறியதாவது: குறித்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம், இதுவரை 15 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டியிருந்த பெண் படையினரின் சேவை காலம் மேலும் 07 ஆண்டுகளால் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை கால நீட்டிப்பு மூலம், குறித்த பெண் படையினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
"நீங்கள் ஒரு புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளீர்கள். இராணுவத்தில் உள்ள பெண்கள் இதுவரை 15 ஆண்டுகள் பணியாற்றி வந்தனர். 15 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் அவர்கள் ஓய்வு பெற்றனர். ஆனால் இப்போது என்ன நடந்திருக்கிறது என்றால், ஆண்கள் 22 ஆண்டுகள் பணியாற்ற வேண்டிய நிலையில், பெண்களுக்கு 15 ஆண்டுகளாக இருந்தது இப்போது 22 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, இராணுவத்தில் பணியாற்றி 15 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற பெண்கள், இப்போது மேலும் 07 ஆண்டுகள், அதாவது 55 வயது வரை இராணுவத்தில் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சட்டம், இந்நாட்டு பெண்களுக்கு, பணியாற்றியவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அநீதி இழைத்துள்ளது என்றே நான் கருதுகிறேன்."