Feb 28, 2025 - 06:42 PM -
0
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளின் குழு ஒன்று, 'ஹரக் கட்டா'வின் சகாக்கள் குழு ஒன்றை கைது செய்வதற்காக மாத்தறை வெலிகம பிரதேசத்திற்கு சென்றிருந்தது.
அப்போது, வெலிகமவில் அமைந்துள்ள W 15 ஹோட்டல் பகுதியில் இருந்து சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அந்த திசையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.