செய்திகள்
கணேமுல்ல சஞ்சீவ கொலை - மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

Mar 1, 2025 - 07:13 AM -

0

கணேமுல்ல சஞ்சீவ கொலை - மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

சஞ்சீவ குமார சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்சீவவை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை கொழும்பு குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. 

இந்த குற்றத்திற்காக உதவி மற்றும் ஆதரவு வழங்கியதற்காக குறித்த சந்தேக நபர்களை நேற்று (28) மினுவாங்கொடை பகுதியில் வைத்து கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். 

இந்த குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட சிம் அட்டைகளை வழங்கி பிரதான சந்தேகநபர்களுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய உதார நிர்மால் குணரத்ன மற்றும் 31 வயதுடைய நளின் துஷ்யந்த என்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவர்கள் மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

2025 பெப்ரவரி 19 ஆம் திகதியன்று புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். 

அதன்படி, இதுவரை இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05