Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
கூலி படத்திற்கு 1000 கோடி வசூல் கன்ஃபாம்! வௌியான முதல் விமர்சனம்

Mar 1, 2025 - 01:22 PM

கூலி படத்திற்கு 1000 கோடி வசூல் கன்ஃபாம்! வௌியான முதல் விமர்சனம்
Mobitel Inner 1278

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகி உள்ளது. 

வேட்டையன்' (vettaiyan) படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) தற்போது நடித்துவரும் திரைப்படம் 'கூலி'. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த திரைப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதிமாறன் தயாரித்து வருகிறார். 

 

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நாகார்ஜுனா (Nagarjuna) , உபேந்திரா (Uppendra) , சௌபின் ஷஹீர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ரெபே மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர், அமீர்கான், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

நடிகை பூஜா ஹிட்டே (Pooja Hegde) இந்த திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடியுள்ளார். மேலும் இதற்காக மட்டுமே இவருக்கு மூன்று கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு, அனிருத் ரவிச்சந்திரன் (Anirudh Ravichandran) இசையமைக்க கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளர். 

இந்நிலையில் இந்த படம் குறித்து தற்போது தன்னுடைய முதல் விமர்சனத்தை பிரபல நடிகர் சந்திப் கிஷன் (Sundeep Kishan) கூறியுள்ளது ரஜினிகாந்த் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது. 

அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின், முதல் 45 நிமிட காட்சியை பார்த்துவிட்டதாகவும் கண்டிப்பாக இப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என இவர் தெரிவித்துள்ளது, படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. 

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு கேங்ஸ்டர் (Gang Star) ஆக நடித்துள்ளார். கோல்டு ஸ்மக்லிங் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, 30 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளை இயக்குவதில் படக்குழு முழு கவனம் செலுத்தி வருகிறது. இந்த படத்தை கூடிய விரைவில் முடித்து, ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய பட குழுவினர் தயாராகி உள்ளனர். 

ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த், 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் இணைய உள்ளார். 

இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தான் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில் நடித்த பல நடிகர்கள் இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்தாலும், இன்னும் பல நடிகர்கள் புதிதாக இணை உள்ளனர். 

அதேபோல் முதலில் இந்த படத்தில் பிரபல நடிகர் சிவராஜ்குமார் நடிக்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயாராகி வரும் நிலையில் ஜெயிலர் 2 படத்திலும் களமிறங்கி மாஸ் காட்சியில் தெறிக்க விடுவார் என்பது உறுதியாகி உள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278