விளையாட்டு
செஸ் தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய குகேஷ்

Mar 2, 2025 - 07:46 AM -

0

செஸ் தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய குகேஷ்

உலக செஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை (கிளாசிக்கல்) சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி முன்னாள் உலக செம்பியனான நோர்வேயின் மாக்னஸ் கார்ல்சென் (2,833 புள்ளி), ஜப்பானின் ஹிகாரு நகமுரா (2,802) முறையே முதல் 2 இடங்களில் தொடருகின்றனர். 

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் உலக செஸ் செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய சென்னையைச் சேர்ந்த குகேஷ் (2,787) 10 புள்ளிகள் அதிகரித்து 2 இடம் முன்னேற்றம் கண்டு 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும். 

சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா (2,758) 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு டொப்-10 இடங்களுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05