Mar 2, 2025 - 11:29 AM -
0
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் போடோஸி பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் அதிக வேகத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் 37 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 39 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கு அதிக வேகம் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் சிக்கிய பேருந்துகளில் ஒன்று, நாட்டின் புகழ்பெற்ற ஒருரோ கார்னிவலுக்கு பயணித்த ஒரு குழுவை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கு காரணம் போடோசி பகுதியின் மலைப்பாங்கான தன்மையும், சரியான வீதி பராமரிப்பு இல்லாததே என்று கூறப்படுகிறது.