Mar 2, 2025 - 12:27 PM -
0
சுதுமலையில் 1,600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது இரண்டு வகையான 1,600 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றினர். தொடர்ந்து கொக்கோவில் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயது இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.
சந்தேகநபர்களை இன்று (02) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
--