Header Logo

கிழக்கு
சுகாதார சேவை முறைப்பாடுகளை தெரிவிக்க QR குறியீடு

Mar 2, 2025 - 01:05 PM -

0

சுகாதார சேவை முறைப்பாடுகளை தெரிவிக்க QR குறியீடு

பொதுமக்கள் தங்களது சுகாதார சேவைகள் குறித்த முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக QR குறியீட்டு முறைமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைவாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். 

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொது இடங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கான இந்த QR குறியீட்டு ஸ்டிக்கர் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (1) சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியும் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் சம்மேளனத் தலைவருமான டாக்டர் சனூஸ் காரியப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். 

மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவரும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட உணவு கையாளும் நிறுவன தலைவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

--

Comments
0

MOST READ

காணொளி
ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

title