Header Logo

சினிமா
சீன மொழியில் வெளியாகிறது FIRE

Mar 2, 2025 - 03:20 PM -

0

சீன மொழியில் வெளியாகிறது FIRE

சீன மொழியில் ஜே.எஸ்.கே. சதீஷ்குமாரின் 'ஃபயர்' படம் வெளியாக உள்ளது. ஜே.எஸ்கே.சதீஷ்குமார் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் 'ஃபயர்'. 

இதில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்தார். சாந்தினி, சாக்‌ஷி அகர்வால், ரச்சிதா ஹீரோயின்களாக நடித்தனர். சமூக அவலங்களை தோலுரித்து காட்டும் படமாக இது அமைந்திருந்தது. இந்த படத்துக்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த படத்துடன் மேலும் 11 படங்கள் வெளியான நிலையில் 3ஆவது வாரம் கடந்தும் இந்த படம் மட்டுமே வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை நல்ல விலைக்கு போயுள்ளது. 

மேலும் கேரளாவிலும் இப்படம் வௌியாக உள்ளது. இதைத் தொடர்ந்து சீன மொழியில் டப் ஆகி படம் ஏப்ரலில் சீனாவில் வௌியாக உள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதியின் மகாராஜா படம் சீனாவில் வெளியாகி பெரிய ஹிட்டானது. அந்த சாதனையை 'ஃபயர்' படம் முறியடிக்கும் என டிரேட் வர்த்தகர்கள் கூறுகின்றனர். சிறு பட்ஜெட்டில் உருவான இந்த படம் நல்ல இலாபத்தை தந்துள்ளதாக திரையரங்க அதிபர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title