Mar 2, 2025 - 05:24 PM -
0
கொழும்பு ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி அணிகளுக்கு இடையில் நடைபெறும் 95ஆவது 'Battle of The Maroons' மாபெரும் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவு பெற்றுள்ளது.
கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய ஆனந்தா கல்லூரி 6 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
பின்னர், களமிறங்கிய நாலந்தா கல்லூரி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஆனந்தா கல்லூரி, இன்றைய கடைசி நாளில் 1 விக்கெட்டினை இழந்து 27 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் போட்டி சமநிலையில் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

