Mar 3, 2025 - 07:16 AM -
0
மூன்றாவது மகளிர் பிரிமீயர் லீக் T20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது.
வதோதராவில் நடந்த முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, அதன்பிறகு உள்ளூரில் 4 போட்டிகளிலும் வரிசையாக தோற்று இருக்கிறது.
இந்நிலையில், தொடர் தோல்வி எதிரொலியாக பெங்களூரு ரசிகர்களிடம் பெங்களூரு அணித் தலைவர் ஸ்மிருதி மந்தனா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக, ஸ்மிருதி மந்தனா கூறுகையில், இந்தப் போட்டியை காண ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து ஆதரவு அளித்தனர். தோல்வியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள். பெங்களூரு மைதானத்தில் அவர்களுக்காக ஒரு போட்டியிலும் எங்களால் வெற்றிபெற முடியவில்லை. அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அடுத்துவரும் போட்டிகளில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை வௌியிட்டார்.