செய்திகள்
எழுவை மற்றும் அனலைதீவு இடையே 197 கிலோ கஞ்சா மீட்பு!

Mar 3, 2025 - 10:24 AM -

0

எழுவை மற்றும் அனலைதீவு இடையே 197 கிலோ கஞ்சா மீட்பு!

எழுவை தீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோ கிராம் மற்றும் 400 கிராம் கஞ்சா இன்று (03) காலை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது. 

கடற்படையின் விசேட ரோந்து நடவடிக்கைகளின் பொழுது கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைவாக எழுவைதீவு, அனலைதீவு கடற்பரப்பில் பயணித்த படகு ஒன்றினை சோதனையிட்ட பொழுது 197 கிலோ கிராம் 400 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது. 

தொடர்ந்து காரைநகர் மற்றும் மன்னார் பேசாலை பகுதியினை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் குறித்த இருவரையும் சான்று பொருட்களையும் ஊர்காவற்துறை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05