செய்திகள்
ரயில் நேர அட்டவணையில் மாற்றம்

Mar 3, 2025 - 11:05 AM -

0

ரயில் நேர அட்டவணையில் மாற்றம்

இரவு நேரங்களில் ஓடும் ரயில்களில் காட்டு யானைகள் மோதுவதைத் தடுப்பதற்காக மேலதிக வேக வரம்புகளை அமுல்படுத்தவும், ரயில் சேவை நேர அட்டவணைகளை மாற்றியமைக்கவும் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

காட்டு யானைகள் அதிகளவு நடமாடும் பகுதிகளில் இந்த வேக வரம்புகளை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி மட்டக்களப்பு மார்க்கத்தில் பலுகஸ்வெவயிலிருந்து ஹிங்குராக்கொட வரையும், வெலிகந்தையிலிருந்து புனானை வரையும், திருகோணமலை மார்க்கத்தில் கல்லோயாவிலிருந்து கந்தளாய் பகுதியையும் உள்ளடக்கியவாறு இந்த ரயில் சேவை நேர அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் இந்த நேர அட்டவணை அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 

நேர அட்டவணை கீழே..

Comments
0

MOST READ
01
02
03
04
05