Mar 3, 2025 - 12:30 PM -
0
நிலைபேற்றியல் மற்றும் சூழல் பாதுகாப்பில் தன் உறுதியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில், பலாங்கொடை ரஜவக்க பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மழைக்காடுகளை மீட்டெடுக்கும் செயற்திட்டமொன்றை ஆரம்பிக்க HUTCH ஸ்ரீலங்கா, Rainforest Protectors Sri Lanka அமைப்புடன் இணைந்துள்ளது.
இலங்கையின் இயற்கை பல்லுயிரினத்தை பாதுகாத்தல், காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பைப் புதுப்பித்தல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவித்தல் போன்றவை நிறுவனங்களின் பொறுப்பில் உள்ளன என்பதை வலியுறுத்தும் முக்கிய முயற்சியாக இது காணப்படுகிறது.
இச்செயற்திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் 2025 ஜனவரி 31 அன்று ஆரம்பமானன. இதில் HUTCH ஸ்ரீலங்கா ஊழியர்களும் Rainforest Protectors Sri Lanka அமைப்பின் அங்கத்தவர்களும் பங்குபற்றினர். இயற்கை பல்லுயிரினத்தை பாதுகாக்கும் மற்றும் சுற்றுச்சூழல் நிலைபேற்றியலை வலியுறுத்தும் பொருட்டு, அவர்கள் மரம் நடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த ஆண்டுக்குள் மொத்தம் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இச் செயற்திட்டம், காட்டுச் சூழல் அமைப்பில் நீண்டகால நன்மைகளை உருவாக்குவதை உறுதி செய்யும்.
உலகளாவிய நிலைபேற்றியல் இலக்குகளோடு ஒற்றுமையுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான செயலூக்கம் கொண்ட முயற்சிகளை HUTCH ஸ்ரீலங்கா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. Rainforest Protectors Sri Lanka உடனான ஒத்துழைப்பின் மூலம், காடு மீள்வளர்ப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான நெகிழ்திறன் முயற்சிகளில் நிறுவனம் தன்னுடைய அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. HUTCH ஸ்ரீலங்காவின் நிறுவன விவகாரங்களுக்கான பொது முகாமையாளர் Mangala Bandara அவர்கள், “நிறுவன பொறுப்புணர்வு என்பது வெறும் வணிகச் செயல்பாடுகளைக் கடந்த ஒன்றாக இருக்க வேண்டும். அது எமது சுற்றுச்சூழலும் சமூகங்களும் நீடித்த நேர்மறை மாற்றங்களை அடைய உதவ வேண்டும் என்பதில் HUTCH ஸ்ரீலங்கா உறுதியாக நம்புகிறது. மழைக்காடுகளை மீட்டெடுக்கும் இச் செயற்திட்டம் மூலம், இலங்கையின் மிக விலையுயர்ந்த இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான அடியை நாங்கள் எடுத்து வைக்கிறோம். எதிர்கால தலைமுறைகளுக்கு பசுமைமிக்க சூழலை வழங்கும் நோக்கில், Rainforest Protectors Sri Lanka அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை கொள்கிறோம்,” என தெரிவித்தார்.
Rainforest Protectors Sri Lanka அமைப்பின் ஏற்பாட்டாளர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் Jayantha Wijesinghe, “ரஜவக்க பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசம் மிக முக்கியமான பல்லுயிர் வளமிக்க பகுதியாகும். சுற்றுச்சூழல் சமநிலையை பேணுவதற்கு இதை மீட்டெடுப்பது அவசியம். HUTCH போன்ற பொறுப்புணர்வுள்ள நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது, எங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி, சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்தும். இலங்கையின் மழைக்காடுகளை பாதுகாக்க வணிக நிறுவனங்கள் எவ்வாறு முக்கிய பங்காற்ற முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்த ஒத்துழைப்பு விளங்கும்,” எனக் கூறினார்.
இந்த ஆண்டில் செயற்திட்டத்தின் அடுத்த கட்டங்களும் முன்னெடுக்கப்படும் நிலையில், சுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் தனது ஈடுபாட்டை மேலும் ஆழமாக்கி, பல்வேறு தரப்பினரும் இதில் பங்குபற்றுவதற்கு ஊக்குவிக்க HUTCH ஸ்ரீலங்கா செயல் திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நிறுவன நடவடிக்கைகளுக்கான முன்னுதாரணமாக இது விளங்குவதோடு, அர்த்தமுள்ள மாற்றங்களை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. இலங்கையின் காடுகளை பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்து முன்னேறுவதற்காக HUTCH ஸ்ரீலங்கா உறுதியாக செயல்படுகிறது. நிலைபேற்றியலுடன் கூடிய பசுமைமிக்க எதிர்காலத்தை உருவாக்க, தன்னுடன் இணைந்து செயல்பட சமூகத்தினரும் பிற தரப்பினரும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறது.

