Mar 3, 2025 - 07:14 PM -
0
‘சர்தார் 2’ படப்பிடிப்பின்போது நடிகர் கார்த்திக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் மைசூரில் நிகழ்ந்துள்ளது. இன்று (03) படப்பிடிப்பு நடைபெற்றபோது, கார்த்தியின் காலில் காயம் ஏற்பட்டதாகவும், இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின்படி, இந்த விபத்து நடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தியின் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
‘சர்தார் 2’ படம், 2022ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ படத்தின் தொடர்ச்சியாகும். இது ஒரு தமிழ் உளவு ஆக்ஷன் திரில்லர் படமாகும், இதனை பி.எஸ். மித்ரன் இயக்குகிறார், மேலும் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோரும் நடிக்கின்றமை குறிப்பிட்டத்தக்கது.