Mar 4, 2025 - 10:04 AM -
0
இலங்கை மருந்தாக்கல் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நிபுணத்துவம் கொண்ட முன்னணி நிறுவனமான Morison, மூன்று மேம்பட்ட நம்பிக்கைக்குரிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இருதய நோய்த் துறைக்குள் நுழைகிறது. அவை Cilnidipine மாத்திரைகள் IP 5mg மற்றும் 10mg, Rivaroxaban மாத்திரைகள் 10mg மற்றும் 20mg, மற்றும் Bisoprolol மாத்திரைகள் BP 2.5mg மற்றும் 5mg ஆகியவை ஆகும். இவை அனைத்தும் 30 மாத்திரைகளை கொண்ட blister பொதிகளில் கிடைக்கும். Cilnidipine மற்றும் Rivaroxaban ஆகியவை இலங்கையில் முதன்முறையாக ஹோமாகமவில் உள்ள Morisonஇன் புதிய அதிநவீன மருந்து உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படும்.
இருதய நோய்க்கான புதிய மருந்துப் பட்டியலில் உயர் இரத்த அழுத்தத்திற்கான 4ஆவது தலைமுறை கல்சியம் சனல் தடுப்பானான CilniMor (Cilnidipine) cardio-selective பீட்டா தடுப்பானான BisoMor (Bisoprolol) மற்றும் நேரடி காரணி Xa inhibitor குருதித் திரளெதிரி RivoMor (Rivaroxaban) ஆகியவை அடங்கும். அனைத்து மருந்துகளும் மருந்தியல் சோதனை அளவுருக்களுக்கு இணங்க தரம் உறுதி செய்யப்படும்.
Morison இந்த வரலாற்று மைல்கல்லை பெப்ரவரி 26, 2025 அன்று Touching More Hearts என்ற கருப்பொருளின் கீழ் Cinnamon Grandஇல் இடம்பெற்ற தனித்துவமான தொடக்க நிகழ்வின் மூலம் குறித்தது. இந்நிகழ்வில் முன்னணி சுகாதார வல்லுநர்கள் மற்றும் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த மாலை நேரத்தின் சிறப்பம்சமாக இருதயநோய் நிபுணர்கள், உட்சுரப்பியல் நிபுணர்கள் (Endocrinologists) மற்றும் மருத்துவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி புகழ்பெற்ற ஆலோசகர்கள் பங்கேற்ற குழு கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன் போது அவர்கள் புதிய சிகிச்சைகள் மற்றும் இலங்கையில் வளர்ந்து வரும் தொற்றா நோய்களின் சவால்கள் மீதான அவற்றின் தாக்கம் குறித்து கலந்துரையாடினர்.
Morison லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தினேஷ் அதபத்து கருத்து தெரிவிக்கையில், “Morisonஇல், நாங்கள் நெறிமுறையான பாதையை தெரிவு செய்கிறோம். எங்களுடைய கடமை மாத்திரைகளை தயாரிப்பது மட்டுமல்ல. நாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு மாத்திரையின் பின்னாலும், அவர்களின் மிகவும் கடினமான நேரங்களில் நம்மை நம்பும் ஒரு நபர் இருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். எனவே, எங்களுக்கு இது வெறும் வியாபாரம் மட்டுமல்ல, நாங்கள் மனதால் ஏற்றுக்கொண்டு உண்மையான அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றும் ஒரு பொறுப்பாகும். என்றார்.
“உயர் சுகாதார பராமரிப்பை சகாயமானதாக்குவது” எனும் தமது நோக்கத்திற்கமைய Morison, தற்போதைய சந்தை விலைகளுடன் ஒப்பிடுகையில் அத்தியாவசிய மருந்துகளை கணிசமாக குறைந்த விலையில் வழங்க உறுதிபூண்டுள்ளது. CilniMor மாத்திரை ஒன்று ரூ.30.00 (5mg) மற்றும் ரூ.45.00 (10mg) விலையிலும், RivoMor மாத்திரை ஒன்று ரூ.60.00 (10mg) மற்றும் ரூ.90.00 (20mg) விலையிலும் கிடைக்கும். மேலும், BisoMor மாத்திரை ஒன்று ரூ.15.00 (2.5mg) மற்றும் ரூ.20.00 (5mg) விலையிலும் கிடைக்கும். இந்த விலை நிர்ணய உத்தி, நோயாளிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.30,000இற்கு மேல் சேமிக்கும் திறனை வழங்குவதுடன் இந்த முக்கிய மருந்துகள் இலங்கை நோயாளிகளுக்கு இலகுவாக கிடைப்பதை உறுதிப்படுத்துகின்றன.
Morison வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி இரண்டு ஆண்டுகளுக்குள் சந்தையில் முன்னணி இடத்தைப் பிடித்த நீரிழிவு மருந்தான EmpaMor (Empagliflozin 10mg மற்றும் 25mg மாத்திரைகள்)ஐத் தொடர்ந்து இந்த சிகிச்சைகளின் அறிமுகம் இடம்பெறுகிறது.
தனித்துமான, ஒப்பற்ற, ஒரு பிரத்தியேக உள்நாட்டு மருந்தாக்கல் வர்த்தக நாமத்தை உருவாக்கும் இந்த மாற்றகரமான பயணத்தை Morison தொடர்ந்து முன்னெடுத்து, தன்னிறைவு பெற்ற மருந்து சந்தைக்கு பங்களிக்கும். இலங்கையில் ஆழமாக வேரூன்றி, Hemas Holdings PLCயின் ஆதரவுடன், இந்நிறுவனம் நாட்டின் சுகாதாரத் தேவைகளை புரிந்துகொண்டு தரம் மற்றும் நியாய விலையுடன் கூடிய அண்மைய மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது. அதே வேளை அவர்களின் மதிப்புச் சங்கிலி முழுவதும் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.