Mar 4, 2025 - 12:30 PM -
0
இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் வரி செலுத்த வேண்டும் என்றும், இது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டிற்கும் பொருந்தும் என்று தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.
இன்று (04) பாராளுமன்றத்தில் பேசிய அவர், டிஜிட்டல் துறையில் தனிநபர்களுக்கு மட்டும் வரி விதிப்பது சிக்கலானது என்று குறிப்பிட்டார்.
டிஜிட்டல் துறையை கருத்தில் கொண்ட பின்னரே இந்த 15% விகிதம் பயன்படுத்தப்பட்டது என்றும், இந்த வரி விகிதம் ஒருபோதும் நியாயமற்ற முறையில் விதிக்கப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

