Mar 4, 2025 - 03:57 PM -
0
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (04) நண்பகல் அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், குறிப்பாக கடந்த 9 வருடங்களாக சம்பளம் முரண்பாட்டுப் பிரச்சினை நீடிக்கின்றது இதற்கு எந்த ஒரு அரசும் அதிகாரிகளும் இதுவரை தீர்வு தரவில்லை" என்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களின் ஏற்பாட்டில் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசாங்கம் முன் வைத்துள்ள புதிய வரவு செலவுத் திட்டத்தில் கூட பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுகின்ற கல்விசாரா ஊர்களுக்கு எந்த விதமான வரப்பிரசாதங்களும் முன்வைக்கப்படவில்லை. ஆகவே அரசாங்கம் எமது மேற்படி கோரிக்கைகளையும் தீர்க்கப்படாத ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்தி இன்றைய தினம் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றதாகவும் அரசின் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அநீதியை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாது போனால் பல்கலைக்கழக ஊழியர்கள் தொடர் போராட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டி ஏற்ப்படும். எம்.சி.ஏ. கொடுப்பனவு 45%வீதத்திலிருந்து 36% வீதமாக குறைக்கப்பட்டுள்ளதகவும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த 20% வீத சிறப்பு உதவித்தொகை முழுமையாக இல்லாமலாக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக கொடுப்பனவிலும் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு 25000 ஆக இருந்த மாணவர்தொகை இப்போது 43000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த அளவுக்கு ஊழியர்களின் தொகை அதிகரிக்கவில்லை என தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் எம். எம். காமில் தெரிவித்தார்.
அரசின் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் வெளிவந்துள்ள நிலையில் அதனை ஆராய்ந்த பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த ஒருமணிநேர அடையாள வேலை நிறுத்தம் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தொகுதிக்கு முன்பாக 2025.03.04 ஆம் திகதி நண்பகல் 12.00 முதல் 01.00 வரை சங்கத்தின் உப தலைவர் ஏ.எல்.எம். ஹஸ்மிர் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக நிர்வாக கட்டிடம் முன்பாக கூடிய ஊழியர்கள் நியாயம் கோரி ஊர்வலமாகவும் சென்றனர்.
--