Mar 4, 2025 - 06:05 PM -
0
நீண்ட இடைவேளைக்குப் பின்னர் இயக்குனர் சுந்தர் சி மற்றும் வடிவேலு ஆகியோர் 'கேங்கர்ஸ்' திரைப்படத்தின் ஊடாக இணைந்துள்ளனர்.
இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக இருவரும் திரைப்படத்தில் இணையாமல் இருந்தனர்.
15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி ரசிக்கும் வகையில் இருக்கும். கைப்புள்ள, வீரபாகு மாதிரி 'கேங்கர்ஸ்' படத்தில் வடிவேலு நடத்து இருப்பதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
'கேங்கர்ஸ்' திரைப்படம் ஏப்ரல் 24ஆம் திகதி திரைக்கு வருவதாக படக்குழு போஸ்டர் வௌியிட்டு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.