செய்திகள்
5.2 கிலோ குஷ் போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை கைது!

Mar 5, 2025 - 09:10 AM -

0

5.2 கிலோ குஷ் போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை கைது!

குஷ் போதைப்பொருள் தொகையுடன் நாட்டிற்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் வருகை முனையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் 34 வயதுடைய தாய்லாந்து நாட்டவர் எனவும், தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்கவிற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் உணவுப் பொட்டலங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 05 கிலோகிராம் மற்றும் 200 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதன் மதிப்பு சுமார் 52 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05