Mar 5, 2025 - 01:08 PM -
0
சஞ்சீவனீ ஆயுர்வேத நிறுவனத்துக்குச் சொந்தமான Luxyana Wellness , Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் நல்வாழ்வு மற்றும் குணப்படுத்தலுக்கான ஆண்டின் சிறந்த ஆயுர்வேத வர்த்தகநாமம் எனும் விருதை வென்றுள்ளது. கொழும்பு 03, Crescat Boulevard எனும் முகவரியில் அமைந்துள்ள Luxyana Wellness சஞ்சீவனீ ஆயுர்வேத நிறுவனத்தின் புதிய கருத்திட்டமாகும். சிறந்த ஆரோக்கியத்தை பேணுவதற்கு உதவும் ஆயுர்வேத சிகிச்சைகளை அளிக்கும் அந் நிறுவனம் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும் சிகிச்சை அளிக்கிறது.
Luxyana Wellness இன் மூலம் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை உயரிய மட்டத்தில் பேணுவதற்கு தேவையான பல்வேறு சிகிச்சைகளை பெற முடியும். முழு உடல் மசாஜ், சிரோதார எனும் எண்ணெய் மசாஜ், ஆவிக் குளியல், பவுடர் மசாஜ் மற்றும் மூலிகை நக அலங்காரம் போன்ற சேவைகள் அவற்றில் அடங்கும். ஆத்ரிடீஸ், சைனசைடீஸ், ஒற்றைத்தலைவலி, வெரிகோஸ் எனும் நாளப்புடைப்பு, உடல் பருமன், முகப்பரு, முதுகு வலி, ஸ்பொன்டிலோசிஸ் போன்ற பல்வேறு வியாதிகளுக்கு சிகிச்சை பெற முடியும். உடல் மற்றும் உள்ளத்தை ஒருநிலைப்படுத்தும் யோகா நிகழ்ச்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரு எச்.எம்.டீ.எஸ் சந்தகெலும் அவர்களின் புத்தாக்க சிந்தனையின் வெளிப்பாடாகவே மேற்படி நல்வாழ்வு நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
Luxyana Wellness நல்வாழ்வு நிலையத்தில் மேம்பட்ட தர நியமங்களின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பாலியல் ஆற்றலை தூண்டும் பல்வேறு ஆயுர்வேத மருந்துகளையும் அதனுடன் தொடர்புடைய ஆலோசனை சேவையினையும் பெற்றுக்கொள்ள முடியும். சமநிலையான வாழ்க்கைமுறைக்கு உதவும் சஞ்சீவனீ மதன மோதக்க, முழு உடல் நலத்தை ஏற்படுத்தவும் நீண்ட நேர இன்பத்தை உறுதிப்படுத்தவும் உதவும் காமேஸ்வரி இராசாயன, பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அஸ்வகந்த தைலம் போன்ற இந் நிறுவனத்தின் உற்பத்திகளுக்கு சந்தையில் பெரும் கேள்வி நிலவுகிறது.
ISO 9001:2015 சர்வதேச தரச்சான்றிதழ் மற்றும் GMP சான்றிதழை பெற்றுள்ள இந்த உற்பத்திகளின் உற்பத்திதிறன் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெற்றியானது இலங்கையின் ஆயுர்வேத பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு சஞ்சீவனீ ஆயுர்வேத கம்பனி கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.