Mar 5, 2025 - 01:13 PM -
0
இலங்கையின் முன்னணி டயர் உற்பத்தியாளராக திகழும் சியெட் களனி ஹோல்டிங்ஸின் சமூகம் சார்ந்த குறிப்பாக சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ஹதரலியத்த, பழன மஹாவித்தியாலய மாணவர்கள் அண்மையில் பாடசாலைப்பைகள், பாடசாலை சப்பாத்துகள் மற்றும் உடற்பயிற்சி புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு பயனடைந்தனர்.
சியெட் நிறுவனத்தின் விநியோகச் சங்கிலியின் முக்கிய அங்கமாக விளங்கும் இறப்பர் பயிர்ச்செய்கையாளர்களின் பிள்ளைகளின் கல்வியை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த முன்முயற்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாவது திட்டமாக இது விளங்குகிறது. சியெட் களனி தனது 100மூ இயற்கை இறப்பரை உள்நாட்டு சந்தையில் இருந்து பெறுகிறது, மேலும் இதன் மூலம் நாடு முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது.
சியெட் நிறுவனத்தின் அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களை வழங்கும் இந்த சமீபத்திய முயற்சியின் மூலம், மத்துகம, இரத்தினபுரி, காலி, மொனராகலை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் உள்ள இறப்பர் பயிர்ச்செய்கை சமூகங்களைச் சேர்ந்த சுமார் 600 பிள்ளைகள் பயனடைந்துள்ளனர்.
அண்மையில் இறுதியாக இடம்பெற்ற பாடசாலை உபகரணங்களை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் சியெட் களனியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு ஷமல் குணவர்தன, நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள், பிரதேசத்தில் உள்ள சியெட் விநியோகஸ்தர்கள் மற்றும் பயனாளி பாடசாலையின் அதிபர், ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சியெட் களனியின் பாடசாலை உபகரணங்கள் வழங்கல் மூலம் பயனடைந்த சில மாணவர்கள் இங்கே படத்தில் காணப்படுகின்றனர்.