Mar 5, 2025 - 03:23 PM -
0
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எதிரான வழக்கு இன்று (05) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் முன்னர் வெளிநாட்டு பயணத் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

