Mar 5, 2025 - 04:11 PM -
0
ஐசிசி செம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக சதமும், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதியில் அரைசதமும் விளாசினார்.
இதற்கமைய விராட் கோலி ஐசிசி ஒருநாள் துப்பாட்ட தரவரிசை பட்டியலில் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சுப்மன் கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். இவர் பங்ளாதேஸ் அணிக்கு எதிராக சதமும், பாகிஸ்தானுக்கு எதிராக 46 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.
இந்த பட்டியலில் 3 லீக் ஆட்டங்கள், அரையிறுதி போட்டிகளில் சிறப்பாக விளையாடாத ரோகித் சர்மா 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
பங்ளாதேஸ் அணிக்கு எதிராக 41 ஓட்டங்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 20 ஓட்டங்களும், நியூசிலாந்துக்கு எதிராக 15 ஓட்டங்களும், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 28 ஓட்டங்களையும் ரோகித் சர்மா பெற்றிருந்தார்.
தென்ஆப்பிரிக்கா ஆணியின் துப்பாட்ட வீரர் கிளாசன் 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா அணியின் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர் 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இவர் பாகிஸ்தானுக்கு எதிராக 56 ஓட்டங்களையும், நியூசிலாந்துக்கு எதிராக 79 ஓட்டங்களையும், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 46 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.
பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 2-வது இடத்திலும் (அதே இடத்தில் நீடிப்பு), அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் 6-வது இடத்திலும் (ஒரு இடம் முன்னேற்றம்), நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 7-வது இடத்திலும் (ஒரு இடம் சரிவு), இலங்கை வீரர் சரித் அசலங்க 9-வது இடத்திலும் (ஒரு இடம் சரிவு), ஆப்கானிஸ்தான் வீரர் ஜத்ரன் 10-வது இடத்திலும் (13 இடங்கள் முன்னேற்றம்) உள்ளனர்.