Mar 5, 2025 - 08:04 PM -
0
கடலோர ரயில் மார்க்கத்தில் வஸ்கடுவ, கொங்கஸ்சந்தி பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் ரயில் கடவை ஊடாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று ரயிலில் மோதி இன்று (05) விபத்துக்குள்ளானது.
ரயில் கடவையில் நுழைந்த நிலையில், முச்சக்கர வண்டி செயழிலுந்ததுள்ளது.
இதன்போது மருதானையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கிச் சென்ற ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சுமார் 30 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாரதி முச்சக்கர வண்டியில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார்.
முச்சக்கர வண்டியின் சாரதி களுத்துறை நேபட பகுதியை சேர்ந்தவருடன், இணையத்தளம் ஊடான வாடகை அடிப்படையிலான சேவை வழங்குநர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், ரயிலின் முன்பக்கமும் சிறிய அளவில் சேதமடைந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் சமிக்ஞை அமைப்பு அல்லது ரயில் பாதுகாப்பு கடவை எதுவும் இல்லை என்றும், இதன் விளைவாக, அந்த கடவை நீண்ட காலமாக மிகவும் பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

