Mar 6, 2025 - 07:50 AM -
0
பணயக்கைதிகள் விவகாரம் தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முன்னதாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில், காசாவில் இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வரும் சூழலில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
"இந்த விடயத்தில் இஸ்ரேலுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அமெரிக்க மக்களின் நலனுக்காக உலகெங்கிலும் உள்ள மக்களுடன் உரையாடலும் பேச்சு வார்த்தையும் சரியானது என்று நம்பினோம் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஹமாஸ் அதிகாரிகள் குழு நேற்று (மார்ச் 5) அமெரிக்க தூதுவருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறினர்.
ஹமாஸுக்கும் பல்வேறு அமெரிக்க தரப்பு அதிகாரிகள் இடையே பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தன.
அண்மையில் பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க தூதுவருடன், அமெரிக்க குடியுரிமை பெற்ற இஸ்ரேலிய கைதிகள், உயிருடன் உள்ளவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றிய பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஹமாஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.