Header Logo

சினிமா
தற்கொலைக்கா முயற்சி? பின்னணி பாடகி கல்பனா விளக்கம்

Mar 6, 2025 - 08:05 AM -

0

தற்கொலைக்கா முயற்சி? பின்னணி பாடகி கல்பனா விளக்கம்

தூக்கமின்மை காரணமாக அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று பாடகி கல்பனா தெரிவித்துள்ளார். 

பிரபல பின்னணி பாடகி கல்பனா. தெலுங்கு, தமிழ் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார். 

தமிழில் தாஜ்மகால், ரஜினி முருகன், மாமன்னன், மனிதன், என் ராசவின் மனசுல உள்பட பல்வேறு படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். மேலும், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கல்பனா பங்கேற்றுள்ளார். 

தெலுங்கானாவின் ஐதரபாத் மாவட்டம் நிசாம்பத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கல்பனா வசித்து வந்தார். அவரது வீடு கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த குடியிருப்பில் வசித்தவர்கள் இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கல்பனா மயங்கி கிடந்தார், அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. 

பின்னர், அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, கண் விழித்த கல்பனாவிடம், பொலிஸார் வாக்குமூலம் பெற்றனர். 

அப்போது அவர் கூறியதாவது, 'தூக்கமின்மை காரணமாக, அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன். 

வைத்தியர்கள் பரிந்துரைத்த அளவை விட, அதிக தூக்க மாத்திரைகளை தவறுதலாக எடுத்துக் கொண்டதால் தான் வீட்டில் நான் மயங்கி விழுந்தேன். நான், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

title