Mar 6, 2025 - 12:07 PM -
0
மதுசாரம், புகைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களின் பாவனைகளால் எமது நாடு பல்வேறு வழிகளிலும் பாதிப்படைகின்றது. குறிப்பாக பொருளாதாரம் சுகாதாரம் சமூக சீர்கேடுகள் என பல பிரச்சினைகள் இவற்றினால் ஏற்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
எமது நாட்டில் பெண்களின் மதுசார பாவனை மற்றும் புகைத்தல் பாவனை ஆகியன புறக்கணிக்கத்தக்க சதவீதத்திலேயே காணப்படுகின்றன. ஆகவே பெண்களை பாவனையாளர்களாக மாற்றுவதற்கும் பெண்கள் மத்தியில் மதுசாரத்தையும் புகைப்பொருட்களையும் சாதாரணமாக்க வேண்டும் என்பதற்காகவும் மதுசார நிறுவனங்களும் புகையிலை நிறுவனமும் பல நுணுக்க்களில் முயற்சித்து வருகின்றன மேலும் பெண்களின் மதுசார பாவனை மிகவும் குறைவான விகிதாசாரத்தில் காணப்பட்டாலும் மதுசாரத்தினால் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு பெண்கள் முகங்கொடுக்கின்றனர்.
இவற்றை வெளிக்கொணரும் வகையிலும் ஏனையோரின் மதுசார பாவனையினால் பெண்கள் முகங்கொடுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் 2025ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது ஆய்வொன்றினை மேற்கொண்டது. 25 மாவட்டங்களிலிருந்தும் 15 வயதிற்கும் மேற்பட்ட 1000 பெண்களிடம் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது மதுசார பாவனையினால் பெண்கள் எவ்வாறான பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர் மதுசாரம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை மீறுகின்றன? என்பனவற்றை ஆராயும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும்.