சினிமா
புதிய சீசனிற்கு இந்த இளம் நடிகர் தான் புதிய தொகுப்பாளரா?

Mar 6, 2025 - 01:42 PM -

0

புதிய சீசனிற்கு இந்த இளம் நடிகர் தான் புதிய தொகுப்பாளரா?

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக உள்ளது பிக்பாஸ்.

 

கடைசியாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக்பாஸ் 8 ஆவது சீசன் முடிவுக்கு வந்தது.

 

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற அடைமொழியுடன் விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக களமிறங்க ரசிகர்கள் கொண்டாடும் நிறைய சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொள்ள 8 ஆவது சீசன் ஒளிபரப்பானது.

 

ஜனவரி மாதம் முத்துக்குமரன் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சியும் முடிந்தது.

தமிழை போல தெலுங்கிலும் சமீபத்தில் 8 ஆவது சீசன் நடந்து முடிந்தது. கடைசியாக முடிந்த தெலுங்கு பிக்பாஸ் 8 ஆவது சீசனை பிரபல நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கியிருந்தார்.

 

தற்போது அடுத்த சீசனை இளம் நடிகர் ஒருவர் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதாவது டாப் இளம் நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா தொகுத்து வழங்கப்போவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05