செய்திகள்
வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் சிக்கிய இருவர்

Mar 6, 2025 - 02:50 PM -

0

வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் சிக்கிய இருவர்

சட்டவிரோதமாக 5,880,000 ரூபா மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த ஒரு பெண்ணும் ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று (06) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 

மேற்படி, சந்தேக நபர்கள் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்தவர்களாவர். 

42 வயதுடைய பெண், சிகரெட்டுகளை நாட்டிற்கு கொண்டு வந்தவர் எனவும், மற்றைய நபர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஷார்ஜாவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் பணிபுரியும் 23 வயது இளைஞன் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

பெண் சந்தேக நபர் இன்று அதிகாலை 12.00 மணிக்கு டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும், ஆண் சந்தேக நபர் இன்று அதிகாலை 4.40 மணிக்கு ஷார்ஜாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர். 

குறித்த நபர்களின் பயணப் பைகளில் இருந்து 39,200 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 196 சிகரெட் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 12 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05