Mar 6, 2025 - 07:12 PM -
0
பிரேசிலில் திருவிழா கொண்டாட்டத்தில் கைபேசிகளைத் திருடிய திருடனை பிடிக்க பவர் ரேஞ்சர்ஸ் போன்று வேடமணிந்து பொலிஸார் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் கொண்டாடப்படும் கார்னிவல் திருவிழா உலகம் முழுவதுமே மிகவும் பிரபலமானது. பல்வேறு விதமான மாறுவேடங்களில் மக்கள் இந்த கார்னிவல் ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர். அதை காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் செல்கின்றனர்.
அதற்கமைய, தற்போது பிரேசிலில் கார்னிவல் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது அதில் மாறுவேடத்தில் புகுந்த திருடன் ஒருவன் 7 இற்கும் மேற்பட்ட கைபேசிகளைத் திருடியுள்ளான்.
இதுகுறித்து பொலிஸாருக்க தகவல் வழங்கப்பட்ட நிலையில் திருடனை பிடிக்க பொலிஸார் நூதனமான வழிமுறையை கையாண்டுள்ளனர்.
பிரேசில் பொலிஸாரும் டிவி தொடரில் வரும் பிரபலமான பவர் ரேஞ்சர்ஸ் வேடமணிந்து கொண்டாட்ட ஊர்வலத்தில் புகுந்துள்ளனர்.
ரெட் ரேஞ்சர், க்ரீன் ரேஞ்சர் என பல வண்ணங்களில் புகுந்த அவர்கள் திருடனை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.