உலகம்
நவ்ரு நாட்டின் குடியுரிமை வேணுமா... 91 இலட்சம் மட்டுமே..!

Mar 6, 2025 - 09:55 PM -

0

நவ்ரு நாட்டின் குடியுரிமை வேணுமா... 91 இலட்சம் மட்டுமே..!

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவு நாடான நவ்ரு, வெளிநாட்டினருக்கு 1,05,000 டொலர் இந்திய மதிப்பில் 91 இலட்சத்திற்கும் மேல் செலுத்தி நாட்டின் குடியுரிமையை வழங்கும் "தங்க கடவுச்சீட்டு" திட்டத்தை தொடங்கியுள்ளது. 

உலகின் மூன்றாவது சிறிய நாடான நவ்ரு, மொத்தமாக 20 சதுர கிமீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. பசுபிக் பெருங்கடலில் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நவ்ரு நாட்டின் கடற்கரை பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஆதலால் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிதி திரட்டுவதற்காக நவ்ரு நாடு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. 

திரட்டப்படும் நிதியின் மூலம் நவ்ரு நாட்டின் 90% மக்களை மேடான இடத்திற்கு மாற்ற அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

நவ்ரு நாட்டின் குடியுரிமை இருந்தால், இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 89 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05