செய்திகள்
நாளை விசாரணைக்கு வரும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு

Mar 6, 2025 - 10:23 PM -

0

நாளை விசாரணைக்கு வரும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கை நாளை (07) ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் அழைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார். 

குறித்த உத்தரவை தலைமை நீதிபதி நீதிமன்றத்தின் பதிவாளருக்கு பிறப்பித்துள்ளார். 

அதற்கமைய, நீதிமன்றப் பதிவகம் இது தொடர்பில் சிறை அதிகாரிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அறிவித்துள்ளது. 

மேற்படி, சந்தேக நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது ஏற்படக்கூடிய பாதுகாப்பின்மையைக் கருத்தில் கொண்டு நீதவான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05