Mar 7, 2025 - 06:49 AM -
0
தென் அமெரிக்காவின் மேற்கில் அமைந்துள்ள சிலி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
நிலநடுக்கமானது பூமியில் இருந்து 104 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக பொருள் சேதமோ அல்லது உயிரிழப்புகள் குறித்தோ இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
சிலியில் கடந்த 2010இல் 8.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 500இற்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.