செய்திகள்
இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது

Mar 7, 2025 - 07:06 AM -

0

இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளுக்காக ஆஸ்திரியா நாட்டு பெண்ணிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

வௌிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக குறித்த ஆஸ்திரியா சுற்றுலாப் பயணியிடம் 50,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளதாக தெரியவருகிறது. 

கைதானவர்களில் ஒரு சார்ஜென்ட் மற்றும் 2 கான்ஸ்டபிள்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05