செய்திகள்
பாதுகாப்பற்ற 400 ரயில் கடவைகள் குறித்து அரசாங்கத்தின் தீர்மானம்

Mar 7, 2025 - 12:28 PM -

0

பாதுகாப்பற்ற 400 ரயில் கடவைகள் குறித்து அரசாங்கத்தின் தீர்மானம்

நாடு முழுவதும் சுமார் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தையும் இந்த ஆண்டுக்குள் சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சபைத் தலைவரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று (7) நடைபெறும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார். 

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை சீரமைப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் இதன்போது கூறினார். 

மேலும், சிறந்த போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கு காலம் தேவைப்பட்டாலும், மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு அவ்வளவு காலத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். 

மேலும் கருத்து தெரிவித்த பிமல் ரத்நாயக்க, 

"நமது நாட்டில் பெருமளவில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ளன. இன்று கூட அளுத்கம பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் 400 க்கும் அதிகமாக உள்ளன. அதனால், வீதி பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ், அடுத்த மாதத்திற்குள் மக்களின் பங்களிப்பு மற்றும் தனியார் துறையை இணைத்துக்கொண்டு, இந்த ஆண்டுக்குள் இலங்கையில் பாதுகாப்பற்றவையாகக் கருதப்படும் அனைத்து ரயில் கடவைகளையும் சீரமைப்பதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். இது எங்களுக்கு உள்ள பொறுப்பு. சிறந்த போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கு காலம் தேவைப்பட்டாலும், மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு அவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளக் கூடாது" என்று கூறினார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05