செய்திகள்
பொலிஸ் பணப்பரிசு தொகையை அதிகரிக்க தீர்மானம்

Mar 7, 2025 - 03:57 PM -

0

பொலிஸ் பணப்பரிசு தொகையை அதிகரிக்க தீர்மானம்

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் குறித்து சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் பணப்பரிசு தொகையை அதிகரிக்க பொலிஸ் முடிவு செய்துள்ளது.

 

சமீப காலமாக பதிவாகியுள்ள குற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து பார்க்கையில், நாட்டில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

அதன்படி, அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தனியார் துப்பறியும் நபர்களை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த பொலிஸ் பணப்பரிசு தொகையை அதிகரிக்க பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

 

 

 

 

Comments
0

MOST READ