சினிமா
த.வெ.க சார்பில் இஃப்தார் விருந்து

Mar 7, 2025 - 05:47 PM -

0

த.வெ.க சார்பில் இஃப்தார் விருந்து

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (07) மாலை நடைபெற உள்ளது.

 

இன்று மாலை 6.20 மணிக்கு நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வருகை தந்தார்.

 

வெள்ளி வேட்டி, சட்டை, இஸ்லிமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வருகை தந்தார்.

 

நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

மாலை நோன்பு திறந்த பிறகு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2,000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனன் ஆகியோர் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05