வணிகம்
பெண்களை வலுவூட்டுவதற்காக அவர்களுக்கு நிதி வசதிகள் இலகுவில் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதற்காக DFCC ஆலோக மற்றும் Uber Sri Lanka ஆகியன கைகோர்த்துள்ளன

Mar 7, 2025 - 06:28 PM -

0

பெண்களை வலுவூட்டுவதற்காக அவர்களுக்கு நிதி வசதிகள் இலகுவில் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதற்காக DFCC ஆலோக மற்றும் Uber Sri Lanka ஆகியன கைகோர்த்துள்ளன

DFCC வங்கி பெண்களுக்காக விசேடமாக வழங்கி வருகின்ற DFCC ஆலோக என்ற வங்கிச்சேவையானது Uber Sri Lanka நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், பெண் தொழில் முனைவோருக்கு நிதி வசதிகள் கிடைக்கப்பெறுகின்ற வழிமுறைகளை மேம்படுத்துவதற்காக, மாற்றத்திற்கு வித்திடும் முயற்சியொன்றை ஆரம்பித்துள்ளது. சர்வதேச மகளிர் தினம் 2025 நிகழ்வின் தொனிப்பொருளை ஒட்டியதாக, ‘Accelerating Action’ என்ற இந்த ஒத்துழைப்பானது, பெண்கள் தமது வணிக முயற்சிகளை மேம்படுத்தி, பொருளாதார ரீதியான தமது சொந்தக்காலில் நிற்கும் வலிமையை பலப்படுத்தி, தேசத்தில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லத் தேவையான நிதியியல் வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றது. 

மேற்குறிப்பிட்ட நோக்குடன் முன்னெடுக்கப்படுகின்ற இந்த ஒத்துழைப்பானது வழக்கமான வங்கிச்சேவை ஆதரவுக்கும் அப்பாற்பட்டு, பெண் தலைமை தொழில் முயற்சிகளுக்கு நீண்டகால நற்பலனைத் தோற்றுவிக்கின்றது. கட்டமைக்கப்பட்ட நிதியியல் வழிகாட்டல், தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்கள், மற்றும் Uber தளத்தினூடாக சம்பாதிக்கின்ற பெண்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வங்கிச்சேவை தீர்வுகள் போன்றவற்றை இது வழங்குகின்றது. பெண்கள் மத்தியில் வாடகை வண்டி சாரதிகள், விநியோக சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வர்த்தக கூட்டாளர்களுக்கு தமது வியாபார முயற்சிகளை விரிவுபடுத்தி, மூலதனம் மற்றும் நிதியியல் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை மேம்படுத்தி, நீண்ட கால அடிப்படையில் நிதியியல் ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்கு DFCC ஆலோக இடமளிக்கின்றது. 

DFCC வங்கியின் உப தலைவரும், Pinnacle/கிளை வங்கிச்சேவை திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தலுக்கான தலைமை அதிகாரியுமான ஷேரா ஹசன் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “DFCC ஆலோக என்பது மாற்றத்திற்கான வழிகாட்டியாகும். நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு பெண் தொழில் முனைவோர் தனித்துவமான சவால்களுக்கு முகங்கொடுப்பதுடன், அதன் காரணமாக தமது வியாபார முயற்சிகளை விரிவுபடுத்தி, தக்கவைக்கும் ஆற்றலில் அனேகமாக முட்டுக்கட்டைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். Uber Sri Lanka உடனான இக்கூட்டாண்மையின் மூலமாக, அவர்கள் நிதியியல் ரீதியாக தமது சொந்தக்கால்களில் நிற்பதற்கு அவர்களுக்கு வலுவூட்டும் வகையில், விசேட வங்கிச்சேவை தீர்வுகளை வழங்கி, மேற்குறிப்பிட்ட முட்டுக்கட்டைகளை அகற்றுவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். பெண்கள் வாழ்வில் வெற்றி காணும் போது, அதன் பலாபலன்கள் தனிநபர்களுக்கு அப்பாற்பட்டு, குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தேசிய பொருளாதாரம் என பரந்தளவில் எட்டுகின்றன,” என்று குறிப்பிட்டார். 

Uber Sri Lanka வழங்கல் சேவைக்கான இலங்கைக்கான முகாமையாளர் வருண் விஜேவர்த்தன அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “எமது தளமானது அனைவருக்கும் வளம் காண்பதற்கான வாய்ப்புக்களுக்கு இடமளிக்கும் ஒன்றாக அமைவதை உறுதிசெய்வதில் Uber அர்ப்பணிப்புடன் உள்ளது. எமது தளத்தில் உள்ள பெண்கள் பலரும் தாம் முன்னேறுவதற்கு தேவையான மூலதனம் மற்றும் நிதி வசதிகளை பெறுவது அவர்களுக்கு மிகவும் பயனளிக்கும். DFCC ஆலோகவுடன் கைகோர்ப்பதனூடாக, நிதியியடல் உள்ளடக்கத்தை நாம் வலுப்படுத்தி, பெண்கள் தமது வருமானத்தை அதிகரித்துக்கொள்ள உதவி, தொழில் முனைவோர் என்ற ரீதியில் வளம் காண்பதற்கான வழிமுறைகளை இன்னும் கூடுதலான அளவில் தோற்றுவிக்க முடியும்,” என்று குறிப்பிட்டார். 

இந்த முயற்சியின் கீழ், Uber தளத்தில் தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ள பெண் வாடகை வாகன சாரதிகள், விநியோக சேவையாளர்கள் மற்றும் வர்த்தக கூட்டாளர்கள் தங்குதடையின்றிய பரிவர்த்தனைகளை முன்னெடுப்பதற்கு POS இயந்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், திறன்மிக்க கொடுப்பனவுகளுக்கு M-Teller சேவைகள், தொழிற்படு மூலதனத்திற்கு பிரத்தியேகமான கடன் வசதிகள், செலவுகளை நிர்வகிப்பதற்கு எரிபொருள் அட்டைகள், வணிக பரிவர்த்தனைகளுக்கு நிறுவன கடனட்டைகள், சேமிப்பு மற்றும் நிதியியல் அறிவுசார் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் முன்னுரிமை கடன் வீதங்களுடனான குத்தகை, iConnect சேவைகள், குறுகிய கால கடன்கள் மற்றும் செயற்திட்ட கடன்கள் ஆகியவற்றையும் அவர்கள் பெற்றுப்பயனடைய முடியும். 

நிலைபேறான நிதித் தீர்வுகள் மூலமாக பெண் தொழில் முனைவோருக்கு வலுவூட்டுவதனூடாக, உள்ளடக்கும் வங்கிச்சேவைக்கு DFCC ஆலோக தொடர்ந்தும் மீள்வரைவிலக்கணம் வகுத்து வருகின்றது. தொழில் முனைவோராக வளம் காண்பதற்கு பெண்களுக்கு வலுவூட்டுவது, இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, நிதியியல் வலுவூட்டலில் DFCC ஆலோகவின் தலைமைத்துவத்தை மீளவும் உறுதிப்படுத்தி, எதிர்கால தலைமுறைகளுக்காக அர்த்தமுள்ள வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வழிவகுக்கின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05