கிழக்கு
மட்டக்களப்பில் மகளிர் தின நிகழ்வுகள்

Mar 8, 2025 - 12:48 PM -

0

மட்டக்களப்பில் மகளிர் தின நிகழ்வுகள்

சர்வதேச மகளிர் தினம் இன்றாகும் சர்வதேச மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

 

கிழக்கு மாகாண சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று (08) காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.

 

களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் சிரேஸ் விரிவுரையாளர் றூபிவலன்ரினா பிரான்சிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

 

இதில் சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், அட்டளை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஜனாபா நஹீஜா முஸாபிர்,அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் ஜனாப் வை.றாசீக், அம்பாறை பிரதிக்கல்வி பணிப்பாளர் ஜெயந்திமாலா பிரியதர்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

இதன்போது பல்வேறு கஸ்டங்களுக்கும் மத்தியில் சாதணை படைத்த ஆறு பெண்கள் இதன்போது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05