செய்திகள்
வடக்கின் சமரில் புனித ஜோன்ஸ் கல்லூரி வெற்றி

Mar 8, 2025 - 01:14 PM -

0

வடக்கின் சமரில் புனித ஜோன்ஸ் கல்லூரி வெற்றி

வடக்கின் கிரிக்கெட் சமரில் யாழ் மத்திய கல்லூரிக்கு எதிரான போட்டியில் புனித ஜோன்ஸ் கல்லூரி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. 

'வடக்கின் சமர்' என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு இடையிலான 118 வது கிரிக்கெட் போட்டி கடந்த (06)ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. 

போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களை பெற்றது. 

பின்னர் பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய புனித ஜோன்ஸ் கல்லூரி 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

அதன் பின்னர் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 142 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

இதற்கமைய 93 ஓட்டங்கள் வெற்றி வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய புனித ஜோன்ஸ் கல்லூரி 05 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05