விளையாட்டு
ஐ.சி.சி. விதிமுறை கூறுவது என்ன?

Mar 8, 2025 - 01:45 PM -

0

ஐ.சி.சி. விதிமுறை கூறுவது என்ன?

9 ஆவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை (09) பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் சந்திக்கின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். போட்டி நடைபெறும் நாளில் அங்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.

 

இருப்பினும் இயற்கையை யாராலும் துல்லியமாக கணித்து விட முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவேளை இறுதிப்போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்? ஐ.சி.சி. விதிமுறை கூறுவது என்ன? பார்த்தால்,

 

போட்டி நடைபெறும் நாளன்று 9 ஆம் திகதி மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டால் 'ரிசர்வ் டே'-வுக்கு 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படும். ரிசர்வ் டே நாளன்றும் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் கிண்ணத்தை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

 

ஒருவேளை ஆட்டம் சமனில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05